AhlulBayt News Agency

source : ABNA Exclusive
Thursday

7 January 2016

11:33:13 AM
729265

Full Text;

Second Message of Ayatollah Khamenei to the Western Youth in Tamil

Second Message of Ayatollah Khamenei to the Western Youth in Tamil.

மேற்கத்திய இளவல்களுக்கு இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆயதுல்லாஹ் செய்யித் அலீ காமெனெயீ அவர்கள் இவ்வருடத்தில் எழுதிய இரண்டாவது மடல்

மொழிபெயர்ப்பு: ஆசிரியர். அப்துல்லாஹ் M.A

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் திருநாமத்தால்

மேற்குலக நாடுகளின் இளவல்களுக்கு

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கசப்பான நிகழ்வுகள் நிகழ 'கண்மூடிப் பயங்கரவாதம்' காரணமாயமைந்துவிட்டது. என்னைப் பொறுத்தளவில்இது மிகவும் துரதிஸ்டமானதொரு நிகழ்வாகும். இவ்வாறான நிகழ்வுகள், கலந்துரையாடல்களுக்கான கட்டமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும். எவ்வாறாயினும், வேதனை மிகுவிடயங்கள் தீர்வுகளைக் கண்டுகொள்வதற்கும் பரஸ்பர ஆலோசனைகளுக்கான களநிலவர நிலைமைகளைத் தோற்றுவிப்பதைவிட சேதங்களைப் பன்மடங்காக்கும் என்பதுதான் *யதார்த்தமாகும்.

உலகின் எங்கும் வாழும் சக மனிதனின் வேதனையும், வலியும் இன்னொரு மனிதனின் கவலைக்கு காரணமாகின்றது. குழந்தையின் அன்புக்குரியவர்கள் முன்னாலே அக்குழந்தையின் பார்வை பறிக்கப்பட்டு உயிரிழக்கும் போது, ஒரு தாயின் மகிழ்ச்சி அக்குடும்பத்தின் கண்ணீராக, கவலையாக மாறுகின்றது.

ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் உயிரற்ற உடலை வேறொரு இடத்திற்கு எடுத்துக் கொண்டு விரைகின்றான். பார்வையாளன், ஒருவன் தனது வாழ்வின் இறுதிக்கட்டம் இதுதான் என்று உணராமல் ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இவைகள் தான் காட்சிகள். இக்காட்சிகள்தான் உணர்வலைகளைத் தூண்டிவிடுகின்றன. மனிதனின் உணர்ச்சிகளைக் கிளறிவிடுகின்றன. மனிதத் தன்மையாலும், அன்பினாலும் நன்மைகளை அறுவடை செய்த, மனிதன் இக்காட்சிகளைக் கண்ணுறும்போது மனிதத் தன்மை தாக்கத்திற்குள்ளாகின்றது, தடுமாற்றத்திற்குள்ளாகின்றது. இக்காட்சிகள் பிரான்ஸில் அல்லது பாலஸ்தீனத்தில் அல்லது ஈராக்கில், லெபனானில், சிரியாவில் எங்கு நடந்தாலும் மனிதத்துவம் இத்தாக்கத்திற்கும், தடுமாற்றத்திற்கும் உள்ளாகின்றது.

சந்தேகமில்லாமல் இதே உணர்வலைகளை தங்கள் உள்ளங்களில் சுமந்தவாறு ஒன்றைரை பில்லியன் முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெறுப்புடன் நோக்கப்படுகின்றனர். வெறுத்தொதுக்கப்படுகின்றனர். இவைகளெல்லாவற்றிற்கும் இத்தீய செயல்களைச் செய்பவர்கள்தான் காரணகர்த்தாக்களாய் அமைந்து விடுகின்றனர். இவர்கள்தான், இவ் அவலங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். நல்லதொரு, பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இதனைப் பயன்படுத்தப்படாவிட்டால், இப்பிரச்சினை கசப்பான, பலனில்லா நினைவலைகளை நோக்கி இவ்வலி நகர்த்தப்படும்.

இன்றைய கடுமையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள கூடியவர்கள் இந்த இளவல்கள் தான் என்பதை நான் உண்மையாகவே நம்புகின்றேன். எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளைக் கண்டு பிடிப்பதற்கான சக்தி இவ்விளவல்களிடம் தான் காணப்படுகின்றன. மேற்குலகத்தை தற்போதைய இக்கட்டான நிலைக்கு தவறாக வழிநடாத்தப்பட்ட பாதையின் தடைகளைத் தடுக்கும் தடை வேலிகளாக இவ்விளவல்கள்தான் திகழ்வார்கள் என்பதிலும் ஐயமில்லை.

இன்றைய பயங்கரவாதம் தான் எங்கள் பொதுவான கவலை என்பது மிகச் சரியானது. அண்மைய நிகழ்வுகளின் போது நீங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள், பாதுகாப்பற்ற நிலைமை, அளவுக்கு மீறிய மன அழுத்தங்கள் என்பனவற்றிலிருந்து ஈராக், யெமன், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் அனுபவித்து வருகின்ற வேதனைகளைவிட எவ்விதம் வேறுபடுகின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அத்தியவசியமானது. இவ்வித்தியாசம் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வழிகளில் காணப்படுகின்றது.

1. இஸ்லாமிய உலகு மிகவும் நீண்ட காலமாக பயங்கரவாதத்தினதும், கொடூரத்தன்மையினதும் பாதிப்புக்கு உள்ளாக்கபட்டு மிகவும் நீண்ட எல்லைக்கு பரந்து விரிந்து காணப்பட்டுவருகின்றது.

2. துரதிஸ்டவசமாக இவ்வன்முறை மிகப்பெரிய, குறிப்பிட்ட சக்தியொன்றின் ஆதரவுடன் பல்வேறு வழிமுறைகளினூடாகவும், சாத்தியமான வழிகளினூடாகவும் போஷpக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அல்காயிதா, தாலிபான் இன்னும் அவர்களுடைய விருப்பில்லாத பின் தொடர்வோர்களும், ஐக்கிய அமேரிக்காவின் பங்களிப்பை சில சீருடையணிந்தவர்கள் மூலம் வழங்கி வருபவர்களும் இன்று காணப்படுகின்றனர்.

இந்நேரடி ஆதரவுக்கு அப்பால், வெளிப்படையாக மிகவும் நன்கு அறியப்பட்ட 'தக்ஃபீரி' (பிறர்மீது காஃபிர் குற்றஞ்சுமத்தும்) பயங்கரவாத்தின் ஆதரவாளர்களாக மிகவும் பின்தங்கிய அரசியல் முறைமைகளைக்கொண்ட மேற்குலகின் கூட்டாளிகளாக அணிவகுத்து அரபுநாடுகள் நின்று கொண்டிருக்கின்ற வேளையில் மிகவும் முன்னோடியான ஒளிமயமான பிரகாசமான ஜனநாயகம், அப்பிராந்தியத்தில் இரக்கமற்ற முறையில் அடக்கியொடுக்கப்படுகின்றன. எழுச்சி இயக்கங்களுக்கு மேற்குலகு அளிக்கின்ற பக்கச் சார்பான பதில் சர்ச்சைக்குரிய மேற்குலகின் கொள்கையை மிகத்தெளிவாக படம்பிடித்துக் காட்டக் கூடியதாக இருக்கின்றது.

இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவில் சர்ச்சைக்குரிய மேற்குலகின் கொள்கையை காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த ஆறு தசாப்தங்களாக, அடக்கியொடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கெதிராக மிகமோசமான பயங்கரவாத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பிய மக்கள் ஒரு சில நாட்களுக்கு தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க காணப்பட்டபோதும், மேற்குலகினால் ஒரு சில நாட்களுக்கு தங்கள் வழமையான நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொண்டாலும், பாலஸ்தீன குடும்பங்கள், அவர்களின் சொந்த வீட்டிற்குள்ளேயே சியோனிஸ மரண, நாசகார சக்திகளினால் பாதுகாப்பற்ற தன்மையை எதிர் நோக்கியுள்ளனர். சியோனிஸ அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றவாசிகளின் வீடமைப்பு நிர்மாணப் பணிகள் எவ்வாறு மிகவும் கொடூரமான வன்செயலை, எந்தவகையான பங்கரவாத்துடன் ஒப்பிடக் கூடியதாகவுள்ளது?

இந்த அரசு (இஸ்ரேல்) என்றுமில்லாதவாறு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்தும் தீவிரமாகவும், அதில் செல்வாக்குச் செலுத்தவல்ல அல்லது சுயாதீனமாக செயற்படக்கூடிய அமைப்புக்கள் என அழைக்கப்படும் அமைப்புகளால் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றது. தினந்தோறும் பாலஸ்தீனர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றன. பழத்தோட்டங்களளும், பண்ணைகளும் பாழாக்கப்படுகின்றன. அவர்களின் உடமைகளை அல்லது விவசாய உற்பத்திப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்கான முன்னறிவித்தல் ஏதுமின்றி இக்காரியங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவைகள் யாவும் அவர்களை அச்சமுறுத்தி, பெண்களினதும், குழந்தைகளினதும் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிய இவர்களின் கண்முன்னே அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அடித்துக் கொல்லப்படுவதையும், அவர்களில் சிலரை சித்திரவதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவதையும் கண்டு கொண்டிருக்கின்றனர். இவ்வளவுகாலம் நீடித்த இவ்வன்முறையைப் போன்றதொரு வேறு ஒரு வன்முறையை இன்றைய உலகில் எங்களுக்கு தெரியுமா?

வீதியின் நடுவில் ஆயுதம் தரித்த இராணுவ வீரனின் கொடுஞ்செயலுக்கு எதிராக இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பெண்மணியை சுட்டுக் கொன்றமை பயங்கரவாதமில்லையா? இது என்ன? இதுதான் காட்டுமிராண்டித்தனம். ஏனெனில், ஆக்கிரமிப்புச் செய்துள்ள அரசாங்கமொன்றின் ஆயுதப்படைகள்தான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றன. இதனை தீவிரவாதம் என்று அழைக்கக் கூடாதா? அல்லது ஆறு தசாப்தங்களாக தொலைக்காட்சித் திரைகளில் இக்காட்சிகள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவோ இருக்கலாம். அவைகள், இனிமேலும் எங்கள் மனச் சாட்சிகளுடன் கலக்கக் கூடாது.

மேற்கின் முரண்பட்ட தாக்கத்திற்கு இன்னொரு உதாரணம்தான் அண்மைக் காலமாக இஸ்லாமிய உலகின் மீது மேற்கொள்ளப்படும் இராணுவப் படையெடுப்பாகும். இதனால் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கான நாடுகளில் மனிதர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு மேலதிகமாக பொருளதார, கைத்தொழில் உட்கட்டமைப்புக்களுக்கு பெருஞ்சேதங்கள் விளைவிக்கப்பட்டன. வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் நோக்கிய அவர்களின் நகர்வு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கினறது. அல்லது தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவைகள், பலதசாப்தங்களுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வளவு நடைபெற்றிருந்தும் கூட அவர்கள் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கக் கூடாது என வேண்டப்பட்டிருக்கின்றனர்.

ஒரு நாடு அழிவுக்குள்ளாக்கப்பட்டு அதன் நகரங்களும் பட்டணங்களும் தூசி படர்ந்து கிடக்க எவ்வாறு அவைகள் ஒடுக்கப்பட்டவைகளாக தங்களை நோக்கக் கூடாது எனக் கூறமுடியும்?

ஆசைகாட்டி, தங்கள் அழிவுகளை குறிப்பிடாமலும், விளங்கிக் கொள்ளாமலும் இருப்பதற்கு பதிலாக, கௌரவமான மன்னிப்பை வேண்டி நிற்பது சிறப்பாயிருக்காதா? இவ்வருடங்களில் படையெடுப்பாளர்களின் நயவஞ்சகத் தன்மையாலும், வஞ்சனையாலும் இஸ்லாமிய உலகு பெற்றுக் கொண்ட வலியும், வேதனையும், சடத்துவ இழப்பினால் ஏற்பட்ட வேதனையை விட எவ்விதத்திலும் குறைந்ததாக காணப்படவில்லை.

அன்பின் இளவல்களே !

வஞ்சனையால் கறைபடிந்த இம்மனோபாவத்தை உங்களால்தான் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு.

இம்மனோபாவத்தின் மிக உயர்ந்த திறன், நீண்டகால இலக்குகள் ஒளிந்து கொண்டிருக்கிறதாகும். கேடு நினைக்கின்ற இலக்குகள், அவற்றினை அலங்கரிப்பனவைகளாகும்.

முதலாவது நடவடிக்கையாக, பாதுகாப்பையும், சமாதானத்தையும் தோற்றுவிப்பதில், வன்செயலைத் தூண்டும் இம்மனோபாவத்தை புணரமைக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

மேற்குலகின் கொள்கைகளைப் போர்த்தியிருக்கும் இரட்டை வேடம்தான் பயங்கரவாதம். அதனை அதன் சக்திமிகு ஆதரவாளர்கள் பார்வையில் நன்மை எது? தீமை எது? என பிரித்துப் பார்க்கப்படும்வரை, அரசு நலன்கள் மனிதபெறுமானங்களுக்கும், நன்னெறிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்வரை, வன்செயல்களின் அடிவேரை வேறு இடங்களில் தேடாதிருக்க வேண்டும்.

துரதிஸ்டவசமாக இவ்வேர்கள் மேற்கத்தைய அரசியல், கலாசாரத்தின் மீது, பல வருட காலங்களாக ஆழ வேரூன்றியிருக்கிறது. இவைகள்தான் மென்மையான அமைதியான ஆக்கிரமிப்புக்கு காரணமாயிற்று. உலகின் பல நாடுகள் அவைகளின் உள்ள10ர்தேசிய கலாசாரங்களில் பெருமிதம் கொள்கின்றன. இக்கலாசாரங்கள் பரம்பரை பரம்பரையாகவும் அபிவிருத்தி ஊடாகவும் உரமூட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக மனித சமுதாயம் போசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இஸ்லாமிய உலகு, இதற்கு விதிவிலக்கானதல்ல. எவ்வாறாயினும், தற்கால யுகத்தில் மேற்குலகு நவீன கருவிகளைப் பயன்படுத்தி, அதன் கலாசாரத்தை அப்படியே உருமாற்றம் செய்து, அதன் அசல் வடிவத்திலே உலகளாவிய ரீதியில் திணித்துக் கொண்டிருக்கின்றது. முக்கியத்துமில்லாத கலாசாரங்களை, சுதந்திர வேட்கையில்லாத மேற்கத்தைய கலாசாரத்தை ஏனைய மக்கள் மீது திணிப்பது என்னைப் பொறுத்தவரையில் அமைதியான வன்செயல் என்றும், மிக்க தீங்கிழைக்கக் கூடியவையெனவும் கருதப்படுகின்றது.

வளமான கலாசாரங்களை கொச்சைப்படுத்துவதும் அவற்றின், மிகவும் மதிப்புக்குரிய பகுதிகளை குற்றத்திற்குள்ளாக்குவதும், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மாற்றீடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் கலாசாரம், மாற்றீட்டிற்கான எந்த தகைமைகளையும் கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு மேற்கத்தைய கலாசாரத்தின் பிரதான அடிப்படைக் காரணிகளான 'ஆக்கிரமிப்பு' 'நெறிகெட்ட பாலியல்' இவ்விரண்டும் பிராந்தியத்தின் துரதிஸ்டவசமான இழிகுணங்களாக, அதனால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதான மூலங்களாக இருக்கின்றன.

எனவே, நாங்கள் வேண்டப்படாத, ஆக்கிரமிப்பினதும் இழிவான வேதனைமிகு கலாசாரத்தினதும் பாவிகளா? என்ற வினா எம்மத்தியில் எழுகின்றது. கண்ணியமற்ற, தரக்குறைவான கலாசார வெள்ளப் பிரளயம் எங்கள் இளைஞர்களை நோக்கி திசை திருப்பி அவர்களை பல்வேறு அரைகுறை வடிவங்களாக மாற்றிடும்போது நாங்கள் அதனை அணைகட்டித் தடுக்கும்போது எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதா? கலாசாரப் புரிந்துணர்வின் பெறுமானத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. இப்புரிந்துணர்வுகள், இயற்கையாக நடத்தப்படும் பொழுது, பெறப்படும் கலாசாரத்திற்கு தக்க மரியாதை வழங்கப்படும்போதும், அவைகள் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் செழுமையிலும் நல்ல பலனை நல்குகின்றன. மறுதலையாக இணக்கப்பாடற்ற புரிந்துணர்வுகள் வெற்றியடை முடியாதவைகளாகவும், தீங்கிழைக்கக் கூடியவைகளாகவே அமையும். 'ஐஎஸ்ஐஎஸ்' போன்ற வழிபிறழ் குழுக்கள் இறக்குமதி செய்யப்பட்ட கலாசாரங்களின் கெட்ட நோக்கில் ஈன்றெடுக்கப்பட்டவைகள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. இதனை மதரீதயான விடயமென இலகுவாக எடுத்துக் கொண்டால், இன்று காணப்படுகின்ற காட்சிகளை காலனித்துவவாதிகள் யுகத்திற்கு முன்பு நாங்கள் கண்டிருக்க வேண்டும். ஆனால் வரலாறு வேறுவிதமாக இக்காட்சிகளைச் சித்தரிக்கின்றது. நாடோடிகளாக வாழ்ந்த கோத்திரத்தின் மத்தியில் காலனித்தவ வாதிகளின் சங்கமான தீவிரவாதிகள், அவர்களின் சிந்தனைகள் எவ்வாறு நிராகரிக்கப்பட்டன என்பதை அதிகாரமளிக்கப்பட்ட வரலாற்று ஏடுகளில் மிகவும் தெளிவாக கண்டு கொள்ளலாம். இப்பிராந்தியத்தில் விதைக்கப்பட்ட தீவிரவாதவிதைகள் முற்றாகவே அழிக்கப்பட்டன. மனித வாழ்வின் அதன் உள்ளகப் பகுதியாக கொண்ட மானுட மத சிந்தனைப் பள்ளிகளை இணைத்துக் கொண்டுள்ள, ஒழுக்க நெறிகளை முற்று முழுதாக பேணிவருகின்ற சமூகத்தில் 'ஐஎஸ்ஐஎஸ்' போன்ற அழுக்குகளுக்கு, ஒரு மனித கொலை, முழுமனித சமுதாயத்தின் கொலைக்கு சமன் என்ற எண்ணக் கருவை ஆழப்பதித்துக் கொண்ட சமுதாயத்தில் இது எவ்வாறு சாத்தியமாகும்.

ஐரோப்பாவில் பிறந்து, மானசீகமாகவும், அறிவுரீதியாகவும் பயிற்றுவிக்கப்பட்ட மக்கள்தானா? இவ்வாறான குழுக்களால் கவரப்பட்டு இணைந்து கொள்கின்றனர் என்ற ஒரு கேள்வியை ஒருவர் கேட்க வேண்டியிருக்கின்றது. யுத்த முனைகளுக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை சென்றுவந்த துப்பாக்கி ரவைகளால் துண்டு துண்டுகளாக சிதைக்கப்பட்ட சக நாட்டவரைக் கண்டவுடன் உடனடியாக மிகத் தீவிரமாக வரமுடியமா என்பதை உண்மையிலேயே எம்மால் விளங்கிக் கொள்ள முடியுமா? வன்செயலைக் கொண்டுள்ள ஊழல்மிகு சூழலில் நோய்கள் காவியுள்ள கலாசாரத்தில் இவர்கள் உரமூட்டி வளர்க்கப்பட்டவர்கள் என்பதை கண்டிப்பாக நாம் மறந்துவிட முடியாது. இவ்விடயத்தில் எமக்கு பூரண பிரித்தாயும் ஆய்வு வேண்டற்பாலனது இவ்வாய்வுகளில் மறைக்கப்பட்டனவும் தெட்டத் தெளிவானதுமான ஊழல்கள் தென்படுகின்ற. பொருளாதார, கைத்தொழில் அபிவிருத்தியினால் ஏற்படுத்தப்பட் சமனற்ற நிலை, கட்டியெழுப்பட்ட தப்பெண்ணங்கள், ஓரிரு வருடங்களில், மனதை நோயாளியாக மாற்றக் கூடிய வகையில் தோற்றுவிக்கப்பட்ட கருத்துக்கள் ஆழமாக வேரூன்றப்பட்ட வெறுப்புணர்வுக்கு காரணமாக அமையலாம்.

எவ்வாறாயினும், உங்கள் சொந்த சமூகத்தை, தெளிவாக மூடியுள்ள படலங்களை அகற்ற வேண்டியவர்கள் நீங்கள்தான். முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியவர்கள் நீங்கள்தான். விடுபட வேண்டியவர்கள், நீங்கள்தான் பிளப்புகள் அடைக்கப்படவேண்டும். மாறாக அவைகள் தோண்டப்படக் கூடாது. பயங்கரவாத்தை எதிர்த்துப் போராடும்போது திடீர் செயற்பாடுகள் மாபெரும் தவறாக அமைந்து விடும். இச்செயற்பாடுகள் ஆழமான பிளவை மேலும் விரிவாக்கிவிடும். திடீர் முடிவுகளும், உணர்ச்சி பூர்வமான முடிவுகளும் பொறுப்புவாய்ந்த செயற்பாட்டு தன்மைகொண்ட பல மில்லியன் மனித உயிர்கள் மத்தியில் அமேரிக்கா ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம் சமூகங்களை தனிமைப்படுத்திவிடும். அவர்களை அச்சுறுத்தி பணியச் செய்துவிடும்.

கஸ்டங்கள் துன்பங்கள் என்பன வந்துவிடும் என்ற பயத்தை, முஸ்லிம் சமூகங்கள் மீது ஏற்படுத்திவிடும். நல்மனம் கொண்ட ஆர்வலர்கள் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு விடும். சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற மனக்கிலேசத்தை ஏற்படுத்திவிடும். இத்திடீர் முடிவுகளும் உணர்ச்சி பூர்வமான தீர்மானங்களும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக, பிளவுகளையும் வெறுப்புணர்வுகளையும் அதிகரித்துவிடும்.

மேலெழுந்தவாரியான நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் தற்போதைய வேறுபாட்டுத் தன்மையை அதிகரிக்குமேயன்றி வேறு ஒன்றும் செய்துவிடாது. விசேடமாக சட்ட நடவடிக்கைகள் எதுவுமே செய்துவிடாது எதிர்கால பிரச்சினைகளுக்கான வழிகள் திறக்கப்பட்டுவிடும். விளைவுகள் ஒன்றுமே கிடைக்காது. சில ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டுப் பிரசைகள் முஸ்லிம்களை ஒற்றாவேலையை செய்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என கிடைத்த செய்திகள் அறிவிக்கின்றன. இந்நடவடிக்கை நியாயமற்றது. இப்பொழுது தொடர்கின்ற அநீதியின் பண்பு மீண்டும் பின்னோக்கி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். இவ்வாறான மோசமான பண்புகளை முஸ்லிம்கள் கொண்டிருக்கவில்லை. மேற்குலகு பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களை நன்கு அறிந்துவைத்திருக்கின்றது. இஸ்லாமிய நிலங்களில் மேற்கத்தையவர்கள் விருந்தினர்களாக இருந்துள்ளனர். விருந்தோம்பலின் பண்பினால் கவர்ந்திழுக்கப்பட்டனர்.

வேறொரு நாள், விருந்தளிப்போராக விருந்தினர் முஸ்லிம்களின் சிந்தனைகளினாலும், முயற்சிகளினாலும் அவர்கள் பயனடைந்தனர். அவர்கள் பொதுவாக சகிப்புத் தன்மையையும் அன்பையும் அனுபவித்தனர்.

எனவே, பயங்கர அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடகங்களிலிருந்து இஸ்லாமிய உலகுடனான சரியான புரிந்துணர்வை அடிப்படையுடனும், ஆழமான உட்பார்வையுடனும் இணைந்த சரியான மரியாதைக்குரிய கலந்துரையாடலுக்கான அடித்தளங்களை இளைஞர்களான நீங்கள் தான் இடவேண்டுமென நான் விரும்புகின்றேன். பலமான அத்திவாரங்களின் மீது கட்டியெழுப்பட்ட மாபெரும் மாளிகை, நம்பகத் தன்மையினதும், நம்பிக்கையினதும் நிழலாக, இந்நிழலின் கீழ் அதன் கட்டடக் கலைஞரின் கிரீடம் அமைதி காணும். பாதுகாப்பினதும், சமாதானத்தினதும் தென்றல் வீசும். இச் சாசனம், அவர்கள் மீது உயிலாக எழுதிவைக்கப்படும். ஒளிமயமான எதிர்காலம் பட்டுத்தெறிக்கும். இவ்வெதிர்காலம் பூமியின் கருத்தியலை ஜொலித்துநிற்கும். இவ்வாறானதொரு நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை இளவல்களாகிய நீங்கள் காண்பீர்கள்.

செய்யித் அலீ காமெனெயீ

29, நவம்பர், 2015